ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க குமாரபாளையம் நகர ஒன்றிய மாநாடு

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க குமாரபாளையம் நகர ஒன்றிய  மாநாடு
X

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க குமாரபாளையம் நகர ஒன்றிய மாநாடு குமாரபாளையத்தில் நடந்தது.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க குமாரபாளையம் நகர ஒன்றிய மாநாடு குமாரபாளையத்தில் நடந்தது.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க குமாரபாளையம் நகர ஒன்றிய மாநாடு

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க குமாரபாளையம் நகர ஒன்றிய மாநாடு குமாரபாளையத்தில் நடந்தது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நகர ஒன்றிய மாநாடு குமாரபாளையத்தில் நடந்தது. நிர்வாகி சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார். பஞ்சாலை சண்முகம் வரவேற்று பேசினார். இம் மாநாட்டில் மேற்கு மண்டல செயலாளர் அசரப் அலி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன் வழக்கறிஞர் முத்துசாமி, எச்.எம்.எஸ். மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ், தி.க நகர தலைவர் சரவணன், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பரமன் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்து பழைய நடைமுறைப்படி அனைத்து பிரிவு மாணவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவப் படிப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும், மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் பெண் குழுக்களுக்கு கொடுத்துள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்து மைக்ரோ பைனான்ஸ்களை முறைப்படுத்த வேண்டும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடு இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கும் வீட்டுமனை வழங்கிட ஆவண செய்ய வேண்டும், நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் அந்தந்த பேக்டரியில் வாங்கி உள்ள கடன்களை ரத்து செய்வதுடன் சட்டப்படியான கூலி கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு எஸ்.சி எஸ்.டி பிரிமினருக்கு அந்த நிலங்களை வழங்க வேண்டும், காவிரி நீரை ஆணைய தீர்ப்பின்படி முறையாக அந்தந்த மாதத்தில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், 500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடையை அந்தந்த பகுதிகளில் அமைத்திட வேண்டும்,

ஊனமுற்றோர் ,முதியோர் உதவி தொகை, தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் விதவை ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நில வழிகாட்டி மதிப்பீடு கட்டணத்தை உயர்த்த கூடாது மற்றும் ஆதார் மையங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

குமாரபாளையம் நகர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நகர தலைவராக அசோகன், நகர செயலராக பாலகிருஷ்ணன், துணை தலைவராக பஞ்சாலை சண்முகம், உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு