/* */

குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா

குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம்   சார்பில் முப்பெரும் விழா
X

குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன், நாச்சிமுத்து மற்றும் வள்ளல் சபாபதி ஆகியோரின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செங்குந்த மகாஜன சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் நாட்டாண்மைக்காரர் நந்தகுமார் செங்குந்த மகாஜன சங்க குலக்கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வள்ளல் சபாபதி, பாவேந்தர் பாரதிதாசன், .நாச்சிமுத்து ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில் நாமக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசியதாவது:-

கனக சுப்புரத்தினம் என்ற தனது இயற்பெயரை சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால் புரட்சிக்கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்பட்ட பாரதிதாசன், சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தமிழ் இலக்கியம், கவிதை, நாடகம், கட்டுரை, கதை போன்றவைகளில் சிறப்புற விளங்கியவர்.

திருவாரூர் நாகப்ப சபாபதி முதலியார் இளம்பருவம் முதலே கொழும்பு நகரோடு கைத்தறி துணி வாணிபம் பல ஆண்டுகளாக திறமையுடன் நடத்தி வந்த தம் தந்தையாருக்கு பெரும் துணையாக இருந்து வாணிபத்தை எல்லாம் நன்கு அறிந்து கொண்டார். செங்குந்தர்களின் பொருளாதாரம் உயர்த்த வேண்டும் என்ற உயர் எண்ணத்தில் தொழில்துறையில் பங்குதாரர்களாக செங்குந்தர்களையே இணைத்துக் கொண்டார். நாடெங்கும் சிதறுண்டு கிடந்த 72 கிளை நாட்டு செங்குந்தர்களையும் தாங்கள் பழம் பெருமை வாய்ந்த ஒரு பாரம்பரியத்தின் வாரிசுகள் என்பதை உணரச் செய்தவர் வள்ளல் சபாபதியார்.

நாச்சிமுத்து, கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். சென்னிமலையில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கத்தை தனது முழு முயற்சியால் உருவாக்கினார். கூட்டுறவு சங்க அமைப்பு மூலம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாரத்தை பெருக்குவதற்காக தனது முழு அர்ப்பணிப்பை செலுத்தினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்க செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் தங்கராஜ், அறிவுக்கொடி, நடராஜன் , சண்முகம், முருகேசன், குருமூர்த்தி, கணேசன், ரங்கநாதன், மாணிக்கம், வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 April 2024 12:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது