குமாரபாளையம் நகர திமுக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

குமாரபாளையம் நகர திமுக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்
X

நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் நகரச் செயலர் செல்வத்திற்கு வார்டு செயலர் ராஜ்குமார் மலர்மாலைகள் அணிவித்தார்.

குமாரபாளையம் நகர தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் நகர தி.மு.க. புதிய நிர்வாகிகள் மற்றும் 17வது வார்டு தி.மு.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நகர செயலர் செல்வம் உள்ளிட்ட நகர புதிய நிர்வாகிகளுக்கு வார்டு செயலர் ராஜ்குமார் மலர்மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்தார்.

நகரச் செயலர் செல்வம் பேசுகையில், இப்பகுதி குறைகள் குறித்து வார்டு நிர்வாகிகளிடம் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து குறைகள் போக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நகர நிர்வாகிகள் ரவி, வார்டு நிர்வாகிகள் மனோகரன், சண்முகம், பிரியா ரவிக்குமார், கருணாமூர்த்தி, சித்ரா ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்