குமாரபாளையம் நகர 32வது வார்டு தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா

குமாரபாளையம் நகர 32வது வார்டு தி.மு.க. சார்பில்  முப்பெரும் விழா
X

முப்பெரும் விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் நகர 32வது வார்டு தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

குமாரபாளையம் நகர 32வது வார்டு தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வதுபிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் அப்போது நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 32வது வார்டு தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள், ஸ்கூல் பேக் வழங்கும் விழா, ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவிற்கு குமாரபாளையம் தெற்கு நகர திமுக பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர செயலாளர் செல்வம் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டுகள், ஸ்கூல் பேக், கல்வி கட்டணம் வழங்கினார். வார்டு நிர்வாகிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் இந்த முப்பெரும் விழாவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!