குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறில் ஈடுப்பட்ட 4 பேர் கைது

குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறில் ஈடுப்பட்ட 4 பேர் கைது
X
குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் சரஸ்வதி தியேட்டரில் கே.ஜி.எப். 2 என்ற படம் ஓடிக்கொண்டுள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் சிலர் கூட்டமாக நின்று கொண்டு, சீக்கிரம் டிக்கட் கொடுங்கடா, என தகாத வார்த்தைகள் பேசுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்ததின் பேரில் எஸ்.ஐ. நந்தகுமார் மற்றும் போலீசார் நேரில் சென்று, அங்கு தகாத வார்த்தை பேசிய நான்கு பேரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.

விசாரணை செய்ததில், குமாரபாளையம், சுள்ளிமடைதோட்டம் திருமூர்த்தி 36, ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன் 27, ஈரோடு மாவட்டம், சித்தாரை சேர்ந்த கவின்குமார் 27, ஈரோடு மாவட்டம், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த இளங்கோ 19 என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture