குமாரபாளையம் சர்ச்சில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

குமாரபாளையம் சர்ச்சில் நீட் தேர்வுக்கு   எதிரான கையெழுத்து இயக்கம்
X

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜாநகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் கிறிஸ்தவ ஆலயத்தில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.

குமாரபாளையம் சர்ச்சில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.

நாமக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜாநகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பிரார்த்தனையில் கலந்து கொண்ட சிறுபான்மை மக்கள் மத்தியில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் மற்றும் வடக்கு நகர தி.மு.க. செயலாளர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் சேக் தாவூத் பங்கேற்று பேசினார்.

துணை அமைப்பாளர்கள் ஜூல்பிகார் அலி, ஜான் பீட்டர், நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ், தெற்கு நகர தி.மு.க. செயலாளர் ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பங்கு தந்தை மற்றும் பேரவை உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் தி.மு.க. மாவட்ட மற்றும் நகர கழக நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் திருச்செங்கோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் பழனிக்குமார் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. அரவிந்த் மருத்துவமனை டாக்டர் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை செய்தனர். நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், தி.மு.க. நகர செயலர்கள் செல்வம், ஞானசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜானகிராமன், தங்கராஜ், சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நுரையீரல் பரிசோதனைகள், கண் பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு வலி, பொது மருத்துவம், உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. பரிசோதனை, சிறுநீர், மகளிர் சுகாதாரம் உள்ளிட்ட சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமிலும், பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

Tags

Next Story