குமாரபாளையம் சிமெண்ட் ஆலை லாரி உரிமையாளர்கள் தாசில்தாரிடம் மனு

சிமெண்ட் ஆலை லாரி உரிமையாளர்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
குமாரபாளையம் அருகே உள்ள சிமெண்ட் ஆலை லாரி உரிமையாளர்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே படைவீடு பேரூராட்சி பகுதியில் சங்கர் சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அமைய இடம் கொடுத்த நபர்கள் உள்ளிட்ட பலர் வைத்துள்ள லாரிகள் மூலம் ஆலை நிர்வாகம் சிமெண்ட் மூட்டைகளை முகவர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வந்தது. சில நாட்களாக வேறு நபர்களுக்கு மூட்டைகள் அனுப்ப உரிமம் கொடுத்ததால், இவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியானது. இது குறித்து சிமெண்ட் ஆலை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் படைவீடு முன்னாள் பேரூராட்சி தலைவர் பெருமாள் தலைமையில் குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேலிடம், இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இது குறித்து பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆலையில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்ட காலம் முதல் 500 க்கும் மேற்பட்ட லாரிகள், இங்கு உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகளை வினியோகம் செய்து வந்தனர். சில நாட்களாக ஆலை நிர்வாகத்தின் சார்பில் மினி லாரிகள் மூலம் சிமெண்ட் மூட்டைகள் வினியோகம் செய்து வந்தனர். மேலும் தற்போது வெளியூர் லாரிகளை வரவழைத்து, அதன் மூலம் சிமெண்ட் மூட்டைகளை அனுப்பி வருகின்றனர். இதனால் இதனை நம்பி வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தார் வருமானம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆர்.டி.ஓ. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu