குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம்   தெரியாத ஆண் பிரேதம்
X
குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருந்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் கிடந்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய காவேரி பாலம் அடியில், அடையாளம் தெரியாத, 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் இருப்பதாக இன்று காலை 07:00 மணியளவில் பொதுமக்கள் போலீசில் தகவல் கூறினர். இது குறித்து வி.ஏ.ஒ. முருகன் கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவிரி ஆற்றிற்குள் உயிரற்ற உடலாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இதுபற்றி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இறந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து இருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால், இவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கும் என தெரியவருகிறது. தற்கொலையா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா ? யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai solutions for small business