குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி

குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி
X

குமாரபாளையம் நான்குவழிச்சாலையில் விபத்தில் சிக்கிய கார்.

குமாரபாளையத்தில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

நாமக்கல் அருகே கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சூர்யா(22). இவர் மலேசியாவில் பணியாற்றி வந்தார். இவரும், இவரது மாமா விக்னேசும்(26) இன்று திருமண நிகழ்ச்சிக்காக கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சூர்யா ஓட்டினார். குமாரபாளையம் சேலம்&கோவை புறவழிச்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, முன்னே சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்தை கார் சாலையின் எதிர்பக்கத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சூர்யா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சூர்யா இறந்தார். படுகாயமடைந்த விக்னேசுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!