குமாரபாளையம்: வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு பரிசீலனை

குமாரபாளையம்: வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு பரிசீலனை
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு பரிசீலனை பட்டியல் ஆணையாளர் அறை முன் ஒட்டப்பட்டிருந்தது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

தமிழக அரசால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன. 28 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் இரு நாட்கள் குமாரபாளையம் நகராட்சியில் வேட்புமனு தாக்கல் மந்த நிலையில் இருந்தது. அதன்பின் தீவிரமாகி 248 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் பரிசீலனை இன்று காலை 10:00 மணிக்கு துவங்கியது.

ஒரு வார்டுக்கு 10 நிமிடம் எனும் அளவில் கால நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டு 33 வார்டுகளுக்கு மாலை 03:30 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் வேட்புமனு பரிசீலனை நடத்தப்பட்டது. அதற்கான பட்டியலும் ஆணையாளர் அறையின் முன் ஒட்டப்பட்டிருந்தது. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அ.ம.மு.க., நாம் தமிழர், கொங்குநாடு கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் காத்திருந்து வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி