புத்தக கண்காட்சியில் இல்லம் தேடி கல்வி மாணவர்கள் வில்லுப்பாட்டு

புத்தக கண்காட்சியில் இல்லம் தேடி கல்வி  மாணவர்கள் வில்லுப்பாட்டு
X

குமாரபாளையத்தில் நடந்து வரும் விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பினரின் புத்தக கண்காட்சியில் இல்லம் தேடி கல்வி மாணவர்கள் வில்லுப்பாட்டு நடந்தது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பாக பள்ளிபாளையம் பிரிவு சாலை, சம்பூர்ணியம்மாள் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இதில் நாள் தோறும் அரசு பள்ளி மற்றும் இல்லம் தேடி கல்வி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசாக புத்தங்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக நகராட்சி அலுவலகம் அருகே உள்ள, அரசு ஆதரவு பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, இல்லம் தேடி கல்வி மாணவ, மாணவியர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் புத்தக கண்காட்சி குறித்தும், இதனால் மாணவ, மாணவியர்களுக்கு, பொதுமக்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்தும் பாட்டின் மூலம் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ், சி.எஸ்.ஐ. பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தனர். பஞ்சாலை சண்முகம், தீனா,சமூக சேவகி சித்ரா, இல்லம் தேடி கல்வி தன்னார்வார்கள் ஜமுனா, ராணி, ராசாத்தி, சித்ரா,ரேணுகா, ரூத் உள்பட பலர் பங்கேற்றனர். புத்தக கண்காட்சி டிசம்பர் 22. நிறைவு நாள் என நிர்வாகிகள் கூறினார்கள்.

Tags

Next Story
ai solutions for small business