குமாரபாளையம் ஐயப்பா சேவா சங்கத்தின் முப்பெரும் விழா, பாராட்டு விழா

குமாரபாளையம் ஐயப்பா சேவா சங்கத்தின்   முப்பெரும் விழா, பாராட்டு விழா
X

நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் குமாரபாளையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மத்திய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் குமாரபாளையத்தில் முப்பெரும் விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கடந்த அக். 24ல் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு, நாமக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய அளவிலான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்வு நடைபெற உதவிய நன்கொடையாளர்கள் மற்றும் உடலுழைப்பு வழங்கியோருக்கு பாராட்டு விழா, மத்திய துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாலசுப்ரமணியம், மத்திய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜெகதீஸ் ஆகியோருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு தலைமையில் நடைபெற்றது.

இதில் உதவிய நன்கொடையாளர்கள் மற்றும் உடலுழைப்பு வழங்கியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை தெரிவிக்கப்பட்டது. மத்திய குழு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட பாலசுப்ரமணி, ஜெகதீஸ் இருவருக்கும் பொன்னாடை, மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story