/* */

குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

பிரதி வியாழக்கிழமை தோறும் சாய்பாபா கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே, பூலாக்காடு சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவன் கோவில்களில் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விச்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனுறை மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்களுக்கு கோவிலுக்கு வெளியில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 13 Sep 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு