சாலை விபத்தில் இருவர் காயம் உள்பட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்

சாலை விபத்தில் இருவர் காயம் உள்பட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
X
சாலை விபத்தில் இருவர் காயம் உள்பட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய் மகள் பலத்த காயமடைந்தனர்.

சங்ககிரி, மொத்தையனூர் பகுதியை சேர்ந்தவர் தேவிகலா (வயது 24.) இவர் பிப். 25ல் இரவு 07:00 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில், தன் அம்மா விஜயலட்சுமி, (40), என்பவரை உட்கார வைத்துக்கொண்டு, நேரு நகர் பகுதியில் சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் நசியனூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி, விசாரணை செய்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஜெயராமன், (46). கூலித்தொழிலாளி. பிப். 21ல் தனது ஹீரோ ஹோண்டா டூவீலரில், மாலை 05:00 மணியளவில் பள்ளிபாளையம் சாலை சீராம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த பஜாஜ் பல்சர் வாகன ஓட்டுனர் வேகமாக வந்து இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றார். இதில் ஜெயராமன் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான நபர் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதில் வசிப்பவர் ஸ்வேதா, (24). ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது டி.வி.எஸ். ஜுபிட்டர் 125 என்ற வாகனத்தில், பின்புற சீட்டில் தன் அம்மா பரிமளா, (44), வை, உட்கார வைத்துக்கொண்டு, நேற்றுமுன்தினம் மாலை 05:30 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை,காவிரி பாலம் நுழைவுப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹுண்டாய் வெர்மா கார் ஓட்டுனர், இவரது டூவீலரில் மோத, நிலைதடுமாறி தாய், மகள் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் ஓட்டுனரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!