விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள்

விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள்
X
விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

குமாரபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்த நிலையில் லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர்கள் காளியம்மாள்,( 52,) சுந்தரம், (63). காளியம்மாளின் புற்றுநோய் சிகிச்சைகாக, தம்பதியர் இருவரும், மாருதி ஆல்டோ காரில், அதே பகுதியை சேர்ந்த, காத்தவராயன், (57), என்ற ஓட்டுனர் காரை ஓட்ட, இருவரும் உட்கார்ந்து சென்றனர். நேற்று காலை 05:00 மணியளவில், குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில், கவுரி தியேட்டர் பின்புறம், ரெட்டியார் டீக்கடை அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென்று எவ்வித சிக்னல் செய்யாமல் லாரியை திருப்ப, வேகமாக வந்த கார், லாரியின் மீது மோதியதில், தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் நசியனூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து, லாரி ஓட்டுனர் கோவையை சேர்ந்த முருகன், (31), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதியில் வசிப்பவர் கார்த்தி, (36). வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி பிரிந்து சென்று விட்டார். அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்த இவர் மார்ச். 21ல், காலை 11:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் இது குறித்து வழக்குப்ப பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!