கல்லூரி மாணவர்கள் காயம் உள்பட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் கேசவன் (வயது28). சிவில் என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது பஜாஜ் பிளாட்டினா டூவீலரில், பின்னால் தன் மனைவி சௌமியாவை, (28), உட்கார வைத்துகொண்டு, சேலம் சாலை ராஜம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹீரோ ஸ்ப்லண்டர் வாகன ஓட்டுனர், இவர்கள் வந்த வாகனம் மீது மோதியதில், மூவரும் படுகாயமடைந்தனர். கேசவன், சௌமியா இருவரும் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர், சேலத்தை சேர்ந்த கார்மெண்ட்ஸ் கூலித்தொழிலாளி மவுனேஷ், (18), குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டூவீலர், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டையில் வசிப்பவர் கார்த்திக்ராஜ், (வயது23). குமாரபாளையம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி. படித்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில், தன்னுடன் படிக்கும் பூபாலன், (22), என்பவரை, பல்லக்காபாளையத்தில் உள்ள அவரது சித்தி வீட்டில் விட்டு வர வேண்டி, தன் ஹீரோ டூயட் என்ற டூவீலரில் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, சேலம் கோவை புறவழிச்சாலை, அருவங்காடு அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், சரக்கு வாகன ஓட்டுனர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த முருகன், (39), என்பவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu