மதுபாட்டில் விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்

மதுபாட்டில் விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
X
மதுபாட்டில் விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஒட்டன்கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள்(வயது 69.) கூலித் தொழிலாளி. நேற்றுமுன்தினம் காலை 11:30 மணியளவில், ஆனங்கூர் சாலை, ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு சரக்கு வாகன ஓட்டுனர் கிழக்கு காலனியை சேர்ந்த சவுந்தர்ராஜன், (28,) என்பவரை கைது செய்தனர்.

அந்தியூர் அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கீர்த்தனா,( 19.)இவர் குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயோ கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு வந்த இவர், மாலை 04:00 மணியளவில் கல்லூரி கழிவறை சென்று வருவதாக தோழியர்களிடம் கூறி சென்றவர் திரும்ப கல்லூரி அறைக்கு வரவில்லை. 04:30 மணியளவில் கீர்த்தனாவின் தோழி, பவித்ரா என்பவருக்கு, அதே கல்லூரியில் படிக்கும் ராஜேஷ்குமார் என்பவர் போன் செய்து, கீர்த்தனா இனி வரமாட்டார். நான் அழைத்து செல்கிறேன், என்று கூறியுள்ளார். இது குறித்து கீர்த்தனாவின் பெற்றோருக்கு பவித்ரா தகவல் தர, கீர்த்தனாவின் தந்தை தேவராஜ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்து, தன் மகளை மீட்டு தருமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

குமாரபாளையத்தில் அரசு அனுமதி பெறாமல் மது விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், சந்தியா, முருகேசன், டேவிட், குணசேகரன், உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ராஜம் தியேட்டர், வட்டமலை, கோட்டைமேடு, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதியில் பெட்டிக்கடை, மளிகை கடை ஆகியவற்றில் மது விற்பது அறிந்து, நேரில் சென்ற போலீசார் வேலுமணி,( 53, )வீரன்(,56,) இப்ராகிம்,( 32,) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story