மது விற்ற 4 பேர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் மது, புகையிலை பொருட்கள் விற்ற நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் மது, புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், சந்தியா, முருகேசன், குணசேகரன், மாதேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஓலப்பாளையம், பள்ளிபாளையம் சாலை, சேலம் சாலை சரவணா தியேட்டர் உள்ளிட்ட பகுதியில் அனுமதி இல்லாமல் மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மது விற்ற வேல், (வயது48), குமரேசன், (48), ராஜதுரை, (50), ஆகிய மூன்று நபர்களை கைது செய்து, தலா 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரத்தினசாமி, (65), என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 230 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினார்கள்.
லாரி டயர் வெடித்து, ஜாக்கி வைத்த போது, பின்னால் வந்த லாரி மோதியதில் லாரி ஓட்டுனர் பலத்த காயம் அடைந்தார்.
குமாரபாளையம் அருகே லாரி டயர் வெடித்து, ஜாக்கி வைத்துகொண்டிருந்த போது, லாரியின் பின்பக்கம் வேகமாக மற்றொரு லாரி மோதியதால் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் பலத்த காயமடைந்தார்.
உத்தர பிரதேசம் மாவட்டம், முராதாபாத் பகுதியை சேர்ந்தவர் யூசூப் அலி, (வயது42). இவர் தனது கண்டெய்னர் லாரியில், லோடு ஏற்றிக்கொண்டு, கொச்சியிலிருந்து திருப்பதி சென்று கொண்டிருந்தார். இவருடன் கிளீனராக கோரப், (45), உடன் சென்றார். நேற்றுமுன்தினம் காலை 11:30 மணியளவில் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை டீச்சர்ஸ் காலனி எதிரில் வந்த போது, லாரியின் இடதுபுற முன்புற டயர் வெடித்து, லாரியை நிறுத்தும் நிலை வந்தது. யூசூப்அலி, லாரியின் அடியில் ஜாக்கி மாட்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது இந்த லாரியின் பின்னால் வேகமாக வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி மோதியதில், யூசூப்அலி பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக சேலம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான, அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சரவணன், (44), என்பவரை போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu