Kumarapalayam Area Crime News குமாரபாளையம் கிரைம் செய்திகள்
Kumarapalayam Area Crime News
இரவு தூங்கியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
குமாரபாளையத்தில் இரவு தறி வேலைக்கு செல்ல நேரமாக தூங்கியவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் விஜயகுமார், (41). விசைத்தறி கூலி. நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணி சிப்ட்டுக்கு போக வேண்டும் எனக்கூறி, வீட்டில் மாலை 05:00 மணியளவில் தூங்க சென்றுள்ளார். இவரது அம்மா இவரை மாலை 06:50 மணியளவில் எழுப்ப சென்ற போது, வாயில் நுரை தள்ளியபடி படுத்திருந்தார். இவரை குமாரபாளையம் ஜி.ஹெச். க்கு அழைத்து சென்று காட்டிய போது, இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
2 நபர்கள் பலியாக காரணமான டெம்போ ஓட்டுனர் கைது
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் காஸி, (30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி தயாரிப்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.சேலம் மாவட்டம் அரியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு, தனது மாமியார் தாரா காஸி, (50), மற்றும் மனைவி பாத்திமா ஆகிய மூவரும் ஹோண்டா டியோ டூவீலரில் பெருந்துறை நோக்கி, நேற்றுமுன்தினம் காலை 08:00 மணியளவில் சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் மூன்று பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி ஜஹாங்கீர் காஸி, மற்றும் அவரது மாமியார் தாரா காசி ஆகியோர் உயிரிழந்தனர். பாத்திமா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர், குமாரபாளையம் அருகே நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, (38),என்பவரை இன்ஸ்பெக்டர் தவமணி கைது செய்தார்.
_________________________________________________________________________
கார் மோதி ஒருவர் படுகாயம்
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் அன்பழகன்(39). நிதி நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, வேமன்காட்டுவலசு பிரிவு சாலை அருகே, தனது டூவீலரில் அமர்ந்தபடி மொபைல் போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே வழியில் வேகமாக வந்த வோல்ஸ் வேகன் கார் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனர் கோவையை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரை கைது செய்தனர்.
_______________________________________________________________________
லாரி மோதியதில் ரோட்டில் நின்றிருந்தவர் பலி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வசிப்பவர் ஆதிமூலம்(56). குமாரபாளையம் தனியார் கல்லூரியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 01:30 மணியளவில், கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் ஓரமாக, தனது வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார். அப்போது கோவை பக்கமிருந்து வேகமாக வந்த லாரி ஒன்று, இவர் மீது மோத படுகாயமடைந்தார். இவரை அருகில் இருந்தவர்கள் குமாரபாளையம் ஜி.ஹெச். அனுப்பி வைத்தனர். ஆனால் அவர வழியில் உயிரிழந்ததாக டாக்டர் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், லாரி ஓட்டுனர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி(௩௫) என்பவரை கைது செய்தனர்.
______________________________________________________
நின்ற டெம்போ மீது டூவீலர் மோதியதில் ஒருவர் காயம்
குமாரபாளையம் சங்ககிரி தாலுக்கா மஞ்சக்கல்பட்டியில் வசிப்பவர் ராசு, (68). லாரி பட்டறை கூலி. இவர் நேற்று முன்தினம் இரவு 08:00 மணியளவில் பதிவு எண் இல்லாத பழைய டி.வி.எஸ். வாகனத்தில், பல்லக்காபாளையம் அருகே வரும் போது, எந்த சிக்னலும் போடாமல் நிறுத்தி வைத்த சரக்கு வாகனம் மீது மோதினார். இதில் ராசு படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் இடைப்பாடியை சேர்ந்த தமிழரசன், (26), என்பவரை கைது செய்தனர்.
___________________________________________________________
டூவீலர்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தார் பகுதியை சேர்ந்தவர் குமார்,( 47). இவர் நேற்று மாலை 03:45 மணியளவில் மாமியார் கண்ணாத்தாள், (64), உறவினர் மகன் ஸ்ரீநாத், (13), ஆகிய இருவரையும் தனது டூவீலரில் பின்னால் உட்கார வைத்துகொண்டு, சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பிரிவு பகுதி அருகே வரும் போது, பின்னால் வேகமாக வந்த டூவீலர் மோதியதில், முன்னால் டூவீலரில் சென்ற மூவர் மற்றும் மோதிய வாகனத்தை ஒட்டு வந்த வேமன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மில் தொழிலாளி ரவீந்திரன், (29), ஆகிய நால்வரும் படுகாயமடைந்தனர். இவர்கள் நால்வரும் ஈரோடு ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-- __________________________________________________________________________
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu