குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் வார விழா: வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர்

குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் வார விழா: வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர்
X

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற வார விழாவையொட்டி  வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் வார விழாவையொட்டி வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் வார விழா ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அபெக்ஸ் கிளப் வார விழாவையொட்டி, பஸ், லாரி, டெம்போ, கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது.

அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ பங்கேற்று ஸ்டிக்கர் ஒட்டி சேவை பணியை துவக்கி வைத்தனர்.

செயலர் கார்த்தி, எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் முதல்வர் பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் சம்பத்குமார், மனோகர், சேவை இயக்குனர் சம்பத், வெங்கடேஷ், பிரபு, விஜய்பிரதாப், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare