அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

தேர்தல் மற்றும் உள்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, நான் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியில் போலீசார் அனுமதி இல்லாததால் இன்னும் நன்றி சொல்லக் கூட வராமல் உள்ளேன். இது போல் அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர். மீறி சென்றால் கொரோனா விதி மீறல் என்று வழக்குபதிவு செய்கிறார்கள்.
ஒரு வாரம் பார்த்து விட்டு வார்டு வாரியாக வந்து நன்றி சொல்ல உள்ளேன். மூன்றாவது அலை வர உள்ளதால் பாதுகாப்போடு இருங்கள். 10 ஆண்டு அமைச்சராக இருந்ததற்கு காரணம் உங்கள் உழைப்புதான். என்றும் நன்றி மிக்கவனாக இருப்பேன். தொகுதியில் நாம் வெற்றி பெறுகிறோம்.
ஆனால் ஒரு முறை மட்டுமே நகராட்சியில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதை கவனிக்க வேண்டும். தீவிரமாக பாடுபட்டால் நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் அனைத்தும் நாம் வெற்றி பெறலாம். இங்கு பேசியவர்கள் அனைவரும் சொன்னது முன்னாள் எம்.பி. சுந்தரம் கட்சி, மாறினார் என்பதுதான். என்னை கேட்டால் சனியன், இதோடு விட்டது என்றுதான் சொல்வேன்.
நாமக்கல், கரூர் அ.தி.மு.க. வேட்பாளர்களான பாஸ்கர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தோற்று போவார் என 50 லட்சம் ரூபாய் பந்தயம் கட்டிய கதை எல்லாம் இப்போதுதான் தெரிகிறது என பேசினார்.
இந்த கூட்டத்தில் துணை செயலர் திருநாவுக்கரசு, பழனிச்சாமி, தனசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu