குமாரபாளையம்: இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் படுகாயம்

குமாரபாளையம்: இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் படுகாயம்
X
குமாரபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.

பவானி காமாட்சியம்மன் கோவில்வீதியில் வசிப்பவர் சங்கமேஸ்வரன், 43. கூலிக்கு துணிபைகள் தைக்கும் தொழிலாளி. இவர் நேற்று மாலை 04:30 மணியளவில் பவானி, குமாரபாளையம் பழைய காவேரி பாலத்தில் தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் இவர் பலத்த காயமடைந்து ஈரோடு ஜி.ஹெச்.இல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!