குமாரபாளையம்: நூல் விலை உயர்வை கண்டித்து மே.16ல் உண்ணாவிரத போராட்டம்

குமாரபாளையம்: நூல் விலை உயர்வை கண்டித்து மே.16ல் உண்ணாவிரத போராட்டம்
X

நூல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையம் வட்டார ஜவுளித் தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சிறு குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன் பேசினார்.

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம், உண்ணாவிரதம் குமாரபாளையத்தில் நடைபெறவுள்ளது.

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம், உண்ணாவிரதம் குமாரபாளையத்தில் நடைபெறவுள்ளது.

கடுமையான நூல் விலையேற்றம் குறித்து குமாரபாளையம் வட்டார ஜவுளித் தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நூல் வியாபாரி ஜானகிராமன் தலைமையில் ராமர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மே.16ல் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உண்ணாவிரத போராட்டம், மே.16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம், ஆகியன நடத்துவதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாலை சண்முகம், ஜவுளி உற்பத்தியாளர் அங்கப்பன், விடியல் பிரகாஷ் இதனை ஒருங்கிணைத்தனர். இதில் சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம், சிறு குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன், சம்புவெங்கு வெங்கடேசன், மாதேஸ்வரா டெக்ஸ் முருகன், கே.பி. டெக்ஸ், சிவராம் கம்பெனி வடிவேலு சிவராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!