வீணாக வெளியே சுத்தாதிங்க: குமாரபாளையம் போலீசார் அட்வைஸ்

வீணாக வெளியே சுத்தாதிங்க: குமாரபாளையம் போலீசார் அட்வைஸ்
X
கொரோனா ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என்று, குமாரபாளையம் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தமிழ்க அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குமராபாளையம் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரப் பணிகளை செய்து வருகின்றனர். குமாரபாளையம் காவல் நிலையத்தின் சார்பில் இன்று காலையில், நான்கு டாட்டா ஏசி வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர வீணாக ஊர் சுற்றக் கூடாது; முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, ஒலிபெருக்கி மூலம் வழங்கி, நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யப்பட்டது.

முன்னதாகக் காவல் நிலைய வளாகத்தில் இருந்த இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணமானது தொடங்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் சென்று, ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!