குமாரபாளையத்தில் முகக்கவசமின்றி ரோமியோக்கள் உலா: கலெக்டர் அட்வைஸ்

குமாரபாளையத்தில் முகக்கவசமின்றி ரோமியோக்கள் உலா: கலெக்டர் அட்வைஸ்
X
குமாரப்பாளையம் பகுதியில், முகக்கவசமின்றி சாலையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை, கலெக்டர் எச்சரித்து அனுப்பினார்.

கொரோனா தோற்று அலை 2 மிக வேகமாக தமிழகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழக அரசு, இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கின் முதல் நாளான நேற்று, குமராபாளையம் பைபாஸ் சாலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் , வாகனத்தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசியத் தேவையின்றி, ஊர் சுற்றிக் கொண்டிருந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தார்.

பின்னர், அந்த இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொரோனா தொற்று அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, மாஸ்க் அணிவதன் அவசியத்தையும் வலியுறுத்தி அறிவுரைகளை வழங்கினார். அத்துடன், சாலை விதிகளை மதிக்காது முகக்கவசம் இன்றி பயணம் செய்த ஒருசிலருக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது குமராபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி