வருவாய்துறை அலுவலர்கள் இடமாற்றம்

வருவாய்துறை அலுவலர்கள் இடமாற்றம்
X

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம்.

குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வருவாய்துறை அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பரமத்தி வேலூரில் இருந்து வந்த ரமேஷ்குமார் குமாரபாளையம் தாலுக்கா அலுவலக தலைமை நில அளவையராக பணியில் சேர்ந்தார். குமாரபாளையத்தில் தலைமை நில அளவையராக பணியாற்றிய வெங்கடாசலம் பரமத்திவேலூருக்கு சென்றார். குமாரபாளையம் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலராக மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பிருந்த டி.எஸ்.ஒ. வசந்தி, உதவி தாசில்தார் பிரகாஷ் போலீஸ் பயிற்சிக்கு சென்றுள்ளனர். வி.ஏ.ஒ.-க்கள் பள்ளிபாளையம் சாந்தகுமார் அய்யம்பாளையம் அக்ரஹாரம் பகுதிக்கும், சமயசங்கிலி அக்ரஹாரம் தியாகராஜன் குமாரபாளையம் அமானிக்கும், ஆனங்கூர் ஜனார்த்தனன் படைவீடு பகுதிக்கும், பல்லக்காபாளையம் ரஞ்சித்குமார் பள்ளிபாளையம் பகுதிக்கும், ஒடப்பள்ளி அக்ரஹாரம் பாலசுப்ரமணியம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதிக்கும், பள்ளிபாளையம் அக்ரஹாரம் சங்கர் மோடமங்கலத்த்திற்கும், குமாரபாளையம் அமானி செந்தில்குமார் சமயசங்கிலி அக்ரஹாரத்திற்கும், படைவீடு அரசு ஆனங்கூருக்கும், கொக்காராயன்பேட்டை தியாகராஜன், ஒடப்பள்ளி அக்ரஹாரத்திற்கும், மோடமங்கலம் சண்முகவடிவு பல்லக்காபாளையத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!