குமார பாளையம் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற நகராட்சி சேர்மன்

குமார பாளையம் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற நகராட்சி சேர்மன்
X

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற சேர்மன் விஜய்கண்ணனுக்கு விழாக்குழுவினர் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நகராட்சி சேர்மன் மற்றும் நகர செயலர்கள் பங்கேற்றனர்.

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழாஇன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில் குமார பாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், கிருஷ்ணவேணி, சியாமளா, நந்தினிதேவி, விஜயா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

விஜய்கண்ணனுக்கு விழாக்குழு சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு மரியாதை வழங்கப்பட்டது. நகர தி.மு.க. செயலர் செல்வம், நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி, தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். செல்வம் மற்றும் பாலசுப்ரமணிக்கு விழாக்குழுவினர் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!