குமார பாளையம் தாலுகா வி.எச்.பி. சார்பில் செயற்குழு கூட்டம்

குமார பாளையம் தாலுகா வி.எச்.பி. சார்பில்   செயற்குழு கூட்டம்
X

குமாரபாளையம் தாலுகா வி.எச்.பி. சார்பில் செயற்குழு கூட்டம் கோட்டைமேடு பகுதியில் நகர பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் தாலுகா வி.எச்.பி. சார்பில் செயற்குழு கூட்டம் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா வி.எச்.பி. சார்பில் செயற்குழு கூட்டம் கோட்டைமேடு பகுதியில் நகர பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் ஜெப கூடங்களை தடை செய்ய வேண்டும், மாட்டு இறைச்சி கடைகளில் கன்று குட்டிகளை வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை, தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளவைகளை மீட்டு திருக்கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோயில் அரச்சகரை மாற்றும் செயலை அதிகாரிகள் கைவிட வேண்டும், மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோட்ட செயலர் சபரிநாதன், ஊர் கவுண்டர் இளங்கோ, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஜீவா, கார்த்திகேயன், வடிவேல், பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story