குமார பாளையம் வீதி பெயர் பலகையால் விபத்து ஏற்படும் அபாயம்

குமார பாளையம் வீதி பெயர் பலகையால்   விபத்து ஏற்படும் அபாயம்
X

குமாரபாளையத்தில் சேலம் சாலை சரவணா தியேட்டர் அருகே வீதி பெயர் பலகையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் வீதி பெயர் பலகையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் சேலம் சாலை சரவணா தியேட்டர் அருகே தனலட்சுமி திருமண மண்டபம் செல்லும் சாலை உள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் நகராட்சி நிர்வாகத்தினர் பெயர் பலகை அமைத்தனர். பேவர் பிளாக் நடை பாதை அமைக்கும் பணி நடக்கும் போது, அந்த போர்டு பெயர்த்து எடுக்கப்பட்டு அங்குள்ள இன்னொரு போர்டின் மீது சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இது எந்நேரமும் கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்வோர் மீது விழுந்தால், படுகாயமடைந்து பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படும். விபத்து அபாயம் ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த போர்டை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட போர்டை மீண்டும் அதே இடத்தில் வைக்காமல் இருந்த ஒப்பந்ததாரர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business