குமாரபாளையம்: குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுமக்கள் அவதி

குமாரபாளையம்: குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால்   பொதுமக்கள் அவதி
X

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு செந்தில் மில் அருகே குடிநீரில் சாயக்கழிவு நீர் கலந்து வரும் குழாய் இதுதான்.

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு செந்தில் மில் அருகே குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், அருந்ததியர் தெரு, வேமன்காட்டுவலசு,பாரதி எஸ்டேட், குளத்துகாடு உள்ளிட்ட பல பகுதி பொதுமக்கள், சேலம் கோவை புறவழிச்சாலை, செந்தில் ஸ்பின்னிங் மில் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வந்தனர். நேற்று அந்த குழாயில் வந்த தண்ணீரில் சாயக்கழிவு நீர் கலந்து, நுரையுடன் வந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் குடிநீர் பிடிக்க வழியில்லாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்த குழாயில் வரும் நீரில் சாய நீர் எவ்விடத்தில் கலக்கிறது என்பது அறிந்து, உடனே அதனை சரி செய்து, பொதுமக்கள் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!