சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்

சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமார பாளையம் பகுதி க்ரைம் செய்திகள் இங்கே பதிவிப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
X

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பல இடங்களில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. அமுல்ராஜ் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். உழவர் சந்தை, தம்மன்னன் வீதி ஆகிய பகுதியில் உள்ள மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கையும் களவுமாக பிடிபட்ட கடையின் உரிமையாளர்கள் கிருஷ்ணன், ராஜா கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 21 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்புற கண்ணாடிகள் இரண்டும் திடீரென்று உடைந்து நொறுங்கியது. பயணிகள் மற்றும் ஓட்டுனர் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. இதனால் அச்சமடைந்த பயணிகள் பஸ் விட்டு கீழே இறங்கினர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

­­­­­­­­­­­­­­­­­­­­பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தவமணி, (45. )இவரது மகள் இந்துஜா,( 27.) இவர்கள் இருவரும் இறையமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தங்கள் வீட்டுக்கு, இரவு 08:00 மணியளவில் டூவீலரில் வந்து கொண்டு இருந்தனர். வண்டியை இந்துஜா ஓட்டி வந்தார். கொக்கராயன்பேட்டை அருகே கொம்பைமேடு பகுதிக்கு வந்த போது, இவர்களுக்கு முன்பு கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயற்சிக்கும் போது, எதிரே ஒரு வாகனம் வந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் டிராக்டரின் அடியில் சிகிக்கொண்டனர். இதில் இந்துஜா சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த தவமணி, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் காஸி,(30. )இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி தயாரிப்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.சேலம் மாவட்டம் அரியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு, தனது மாமியார் தாரா காஸி, 50, மற்றும் மனைவி பாத்திமா ஆகிய மூவரும் டூவீலரில் பெருந்துறை நோக்கி, நேற்றுமுன்தினம் காலை 08:00 மணியளவில் சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் மூன்று பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி ஜஹாங்கீர் காஸி, மற்றும் அவரது மாமியார் தாரா காசி ஆகியோர் உயிரிழந்தனர். பாத்திமா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர், குமாரபாளையம் அருகே நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, 38என்பவரை இன்ஸ்பெக்டர் தவமணி கைது செய்தார்.

Updated On: 3 Oct 2023 4:55 PM GMT

Related News

Latest News

 1. வணிகம்
  Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
 2. திண்டுக்கல்
  நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 3. தமிழ்நாடு
  மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
 4. சினிமா
  Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?
 5. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண...
 6. புதுக்கோட்டை
  ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனுக்கொடுக்கும் போராட்டம்.
 7. சோழவந்தான்
  மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆணையர், கவுன்சிலர்கள்...
 9. சினிமா
  மிக்ஜாம் புயல் காரணமாக பிக்பாஸ் எடுத்த திடீர் முடிவு!
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் மழை நீரை அகற்ற 20 எச்.பி. மோட்டார் திறன் கொண்ட பம்பிங்...