குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்டு 4,5-ல் கலந்தாய்வு

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்   ஆகஸ்டு 4,5-ல் கலந்தாய்வு
X

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரி.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்டு 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது ஆகஸ்டு 4ல் காலை 09:30 மணியளவில் சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கும், ஆகஸ்டு 5ல் காலை 09:30 மணியளவில் பொதுப்பிரிவு மாணாக்கர்களுக்கும் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் பதிவு செய்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் மாணாக்கர்கள் ஆக. 4ம் தேதியும், பொதுப்பிரிவு மாணாக்கர்கள் ஆக. 5ம் தேதியும், தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்கள். அனைவரும் முக கவசம் அணித்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!