கொங்கு நாடு மக்கள் பேரவை ஆலோசனை கூட்டம்..!
குமாரபாளையம் அருகே கொங்கு நாடு மக்கள் பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் கொங்கு நாடு மக்கள் பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஏப்.19ல் லோக்சபா தேர்தல் வருவதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே கொங்குநாடு மக்கள் பேரவை சார்பில் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. பழனிசாமி இது பற்றி கூறியதாவது:
கொங்குநாடு மக்கள் பேரவை, வேட்டுவ கவுண்டர் அமைப்பை சேர்ந்தது. 2021ல் பதிவு செய்துள்ளோம். இது பல மாவட்டங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் கூட தி.மு.க. சார்பில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து ஆதரவு கேட்டனர்.
குறுகிய காலத்தில் தேர்தல் பணியாற்ற கூறியதால், ஈரோடு அமைச்சர் முத்துசாமி வசம், தற்போது போதிய கால அவகாசம் இல்லை என கூறினோம். பா.ஜ.க.விலிருந்து மூத்த நிர்வாகி எங்களை தொடர்பு கொண்டு, அண்ணாமலை நடைபயண சமயத்தில் ஆதரவு கொடுங்கள் என கேட்டார்.
அதுபோல் சத்தியமங்கலத்தில் நடந்த அண்ணாமலை நடைபயணத்தில் நாங்கள் பெரும்பாலோர் பங்கேற்று, அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, நடைபயணத்தில் ஆதரவு கொடுத்தோம். விரைவில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறினார்கள்.
தற்போது முருகன் பலமுறை எங்களை நேரில் சந்திக்க விரும்பி கேட்டார். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை இன்னும் முடிவு செய்யவில்லை, செயற்குழு கூட்டம் நடத்தி, எங்கள் முடிவை கூறுகிறோம், என்று கூறினோம். முருகன், அண்ணாமலை ஆகியோரை சந்தித்து எங்கள் முடிவை தீர்மானிக்க உள்ளோம். சில கோரிக்கைகள் வைத்துள்ளோம். அதனை நிறைவேற்றி தந்தால், உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என கூற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோடன், மாநில பொதுச்செயலர் வேலுச்சாமி, மாநில பொருளர் சஞ்சீவ்குமார், மாநில இளைஞர் அணி செயலர் ஹரிஹரன், கரூர் மாவட்ட செயலர் சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu