பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு நகராட்சி தலைவர் தகவல்

குமாரபாளையத்தில் நடந்த பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நகராட்சி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு

நகராட்சி தலைவர் தகவல்

குமாரபாளையத்தில் நடந்த பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக

நகராட்சி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண மற்றும் அவசர நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.

இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

கதிரவன் (தி.மு.க.):

வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வருவது இல்லை. பலமுறை சொல்லியும் பலனில்லை. ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள். இது குறித்து ஆலோசித்து ஆட்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை அள்ளி செல்ல வண்டியை அனுப்ப சொல்லி பலமுறை கேட்டும் இதுவரை அனுப்பவில்லை. வண்டி பழுது பார்க்கப்பட்டு பல நாள் ஆகியும் இன்னும் அனுப்பாதது ஏன்?

சந்தானகிருஷ்ணன் (சுகாதார ஆய்வாளர்);

உடனே அனுப்பி வைக்கிறேன் சார்.

தர்மராஜ் (தி.மு.க.):

எனது வார்டில் வேகத்தடை வேண்டும் என்று பல கூட்டங்களில் கேட்ட படி, தற்போது அந்த வேகத்தடை அமைத்து தந்தமைக்கு நன்றி. இன்னும் பல பணிகள் உள்ளன. அதையும் செய்து தாருங்கள்.

சுமதி (சுயேட்சை):

வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வர சொல்லி எந்த பலனும் இல்லை. பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.

விஜய்கண்ணன் ( நகராட்சி தலைவர் ):

நாராயண நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வகுப்பறைகள் கட்ட 70 லட்சம் ரூபாய் தமிழக அரசால், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே பயன்படுத்தப்படாத வாட்டர் டேங்க் ஐ இடித்து விட்டு, அங்கு புதிய வணிக வளாகம் கட்ட தமிழக அரசால் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தற்போது குடிநீருக்காக தண்ணீர் எடுக்கும் இடம், தூய்மையற்றதாக இருப்பதால், ஊராட்சிக்கோட்டை தடுப்பணை தாண்டி, குடிநீர் எடுக்க, 12 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. அது விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கும்.

இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படவிளக்கம் :

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண மற்றும் அவசர நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.

Next Story