மே. 15க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நகராட்சி அறிவுறுத்தல்

மே. 15க்குள் தமிழில் பெயர்ப்பலகை  வைக்க   நகராட்சி அறிவுறுத்தல்
X
குமாரபாளையத்தில் மே. 15க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே. 15க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க

நகராட்சி அறிவுறுத்தல்

குமாரபாளையத்தில் மே. 15க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் (பொ) அருள் தலைமையில் நடந்தது. இதில் அருள் கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும், தமிழக அரசின் உத்திரவுப்படி, தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும். இதை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது

Next Story