குமாரபாளையத்தில் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றிய நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றிய நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் அடாத மழையிலும் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றினர்

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் அடாத மழையிலும் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றினர்.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, கோம்பு பள்ளம் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. மழை வந்தால் மழை நீர் அடித்து கொண்டு வரும் செடி, கொடிகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை இந்த தரைமட்ட பாலத்தில் சிக்குவது வழக்கம்.

கீழ் பகுதியில் சிக்கி, தண்ணீர் போகமுடியாதபடி, நீர் பாலத்தின் மேலே செல்லும். இதனை தடுக்க வேண்டி மழை வரும்போதே பொக்லின் கொண்டு குப்பைகள் அகற்றப்பட்டன. இதே போல் பல இடங்களில் அடைப்புகளை அகற்றி தண்ணீர் எளிதில் செல்ல வழி செய்யப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி பணியாளர்கள் கொட்டும் மழையிலும் பணி செய்தனர்.


குமாரபாளையத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகத்தால் சாலையில் இருந்த மண் உள்ளிட்ட குப்பைகள் சாலையில் செல்வோர் மீது விழுந்தது.



இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வாகனத்தை ஓட்ட முடியாமல் கீழே இறங்கி தள்ளி செல்லும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கன மழை பெய்தது. சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் சாலையில் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது.

பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் மழை நீர் அதிகம் ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தன

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!