குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
X

குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியில் நடைபெற்ற மழலையர் பட்டமளிப்பு விழா.

குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா தாளாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கே.ஜி. வகுப்பு முதல் முதல் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் 55 பேருக்கு பட்டங்களை தாளாளர் ராமசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின், பிரைமரி பொறுப்பு ஆசிரியை மலர்விழி வழங்கினார்கள்.

பட்டங்கள் பெற்றுக்கொண்ட மாணவ, மாணவியர்கள், முதல்வர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு நிகழ்ச்சியாக யோகா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலா உத்சவ் விழாவில் பங்கேற்று, மாணவி ஹேமாஸ்ரீ பரத நாட்டியத்திலும், மாணவி அபிநயா கிராமிய நடனத்திலும் முதல் பரிசு பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தாளாளர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

இதில் பள்ளியின் செயலர் கோமதி, பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட பல இயக்குனர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

Tags

Next Story