குமாரபாளையத்தில் குழந்தைகள் எடை சரிபார்த்தல் முகாம்: சேர்மன் துவக்கி வைப்பு

குமாரபாளையத்தில் குழந்தைகள் எடை சரிபார்த்தல் முகாம்:  சேர்மன் துவக்கி வைப்பு
X

குமாரபாளையத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உயரம், எடை சரிபார்த்தல் முகாமினை சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உயரம், எடை சரிபார்த்தல் முகாமினை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் ஆரோக்கியமான ஆண், பெண் குழந்தைகள் கண்டறிதல் முகாம் நகரில் உள்ள 37 அங்கன்வாடி மையங்களிலும் மார்ச் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் துவக்கி வைத்தார். இதே போல் குள்ளங்காடு அங்கன்வாடி மையத்தில் கவுன்சிலர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.

வி.ஏ.ஒ. தியாகராஜன், துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் செல்வராஜ், வேல்முருகன், அழகேசன், ஜேம்ஸ், நிர்வாகிகள் செந்தில், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai future project