குமாரபாளையம் இன்ஸ்பெக்டருக்கு கேரளா டி.ஜி.பி. வழங்கிய விருது
படவிளக்கம் :
குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு, கேரளா டி.ஜி.பி. சாலிக் தர்வேஷ் சாஹேப் வழங்கிய விருதினை, ஐ.ஜி. செந்தில்குமார் வழங்கினார். அப்போது டி.ஐ.ஜி. உமா, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
குமாரபாளையம் இன்ஸ்பெக்டருக்கு கேரளா டி.ஜி.பி. வழங்கிய விருது
குமாரபாளையம் இன்ஸ்பெக்டருக்கு கேரளா டி.ஜி.பி. விருது வழங்கினார்.
சில நாட்கள் முன்பு கேரள மாநிலம் ஏ.டி.எம். கொள்ளையர்கள் தமிழகத்தில் குமாரபாளையம் வழியாக ஊடுருவி உள்ளனர் என்ற தகவல் கிடைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். கண்டெய்னர் லாரிக்குள் குற்றவாளிகள் இருக்கும் காரை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். வழியில் இருக்கும் வாகனங்களை பந்தாடியவாறு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. வெப்படை அருகே லாரியை மடக்கி பிடித்து, கண்டெய்னர் கதவை திறக்க, உள்ளே இருந்த நபர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியை இரும்பு கம்பியால் தாக்க, அவனை சம்பவ இடத்தில் சுட்டார். இதில் குற்றவாளி இறந்தான். மற்றொருவன் பணம் இருந்த பையை எடுத்துக்கொண்டு ஓட, அவனை இன்ஸ்பெக்டர் தவமணி காலில் சுட்டார். இந்த இதில் 6 குற்றவாளிகள் பிடிபட்டனர். இந்த சாதனையை செய்த நாமக்கல் மாவட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். இந்நிலையில் கேரளா மாநிலம் டி.ஜி.பி. சாலிக் தர்வேஷ் சாஹேப், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு விருது வழங்கியுள்ளார். இதனை ஐ.ஜி. செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் தவமணியிடம் வழங்கினார். அப்போது டி.ஐ.ஜி. உமா, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu