குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர விழாவையொட்டி பழனிக்கு காவடி யாத்திரை

குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர விழாவையொட்டி பழனிக்கு காவடி யாத்திரை
X

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து பங்குனி உத்திர விழாவையொட்டி பழனிக்கு காவடிகள் புறப்பாடு நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர விழாவையொட்டி பழனிக்கு காவடிகள் புறப்பாடு நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர விழாவையொட்டி பழனிக்கு காவடிகள் புறப்பாடு நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் ஆண்டுதோறும் பழனி மலைக்கு முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து சென்று மலையை சுற்றி வளம் வந்து, சுவாமி தரிசனம் செய்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர காவடி யாத்திரையையொட்டி பக்தர்கள் காவிரியில் நீராடி, தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து, காவடியாட்டம் ஆடியவாறு, ஊர் முழுதும் வலம் வந்தனர். முருகன் திருவுருவப்படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு காவடிகளுடன் பழனி பாதயாத்திரை புறப்பட்டனர்.

Tags

Next Story
ai marketing future