குமாரபாளையத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் கருப்பண்ண சுவாமி கோவில்   கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
X

குமாரபாளையத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் நாராயண நகர் செல்லும் வழியில் பெருமாபாளையம் புதூர் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேளதாளத்துடன் எடுத்து வரப்பட்டது. இன்று மாலை முதல் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

நாளை அதிகாலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், உயிர் ஊட்டுதல், மகா பூர்ணா ஹூதி, காலை 7 மணிக்கு கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையடுத்து சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!