குமாரபாளையத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி   இலவச மருத்துவ முகாம்
X

குமாரபாளையத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி 15வது வார்டு தி.மு.க. சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தொடங்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடந்தது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி தனியார் கல்லூரி பல்துறை மருத்துவமனை, குமாரபாளையம் 15வது வார்டு தி.மு.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வார்டு செயலர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். சளி, காய்ச்சல், தொண்டைவலி, ஆஸ்துமா, மூட்டுவலி, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மன அழுத்தம், பித்தப்பை கற்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற நபர்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் , ஆயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், கோவிந்தராஜ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, நந்தினிதேவி, செல்வி, புஷ்பா, வள்ளி, மகேஸ்வரி, நிர்வாகிகள் செல்வராஜ்,செந்தில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!