முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆதரவற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், கிருஷ்ணவேணி, சியாமளா, கனகலட்சுமி, நந்தினிதேவி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐய்யப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


அதேபோல், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு நகர தி.மு.க. செயலர் செல்வம் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், பரிமளம், அம்பிகா, துணை செயலர் ரவி, நிர்வாகிகள் ராஜ்குமார், அன்பரசு, அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்