குமாரபாளையம் கருமாரியம்மன் கோவில் மண்டல பூஜை துவக்கம்

குமாரபாளையம் கருமாரியம்மன் கோவில் மண்டல பூஜை துவக்கம்
X

குமாரபாளையம் பாரதி நகர், கருமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

குமாரபாளையத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளன.

குமாரபாளையம், பாரதி நகர், ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நவம்பர் 9ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மேள தாளங்கள் முழங்க, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதே நாளில், மாலையில் இருந்து, முதல் கால யாக சாலை பூஜைகள் துவங்கியன.

கடந்த நவ. 10ல் இரண்டாம் நாள் அதிகாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அன்றைய தினம, அதிகாலை 05:00 மணியளவில் கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ தேவிகருமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

குமாரபாளையம் சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், யாக சாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மண்டல பூஜைகள் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. மண்டல பூஜை ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story