குமாரபாளையத்தில் தேசிய கொடியுடன் வலம் வந்த கராத்தே மாணவர்கள்

குமாரபாளையத்தில் தேசிய கொடியுடன் வலம் வந்த கராத்தே மாணவர்கள்
X

குமாரபாளையத்தில் தேசியக் கொடியுடன் இந்தியன் கராத்தே பயிற்சி மைய மாணவர்கள் வலம் வந்தனர்.

குமாரபாளையத்தில் தேசியக் கொடியுடன் கராத்தே மாணவர்கள் வலம் வந்தனர்.

75வது சுதந்திரதின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். விடியல் ஆரம்பம் பிரகாஷ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

நாராயண நகர் நகராட்சி பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், டாக்டர் சண்முகசுந்தரம், சரவணன், மஞ்சுளா தேவி, சபர்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!