அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!

பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்,ஏபிட் அன்னதானக்குழு சார்பில்,இரு வேளைகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் ஏபிடி அன்னதானக்குழு சார்பில், தினந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மதிய நேரத்தில் பசியால் வாடுபவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தினந்தோறும் தயிர் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகளிடம் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு காலத்தில் பணியாற்ற முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர், நகராட்சி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக கபசுரக்குடிநீர், காலை மற்றும் மாலை வேளைகளில் வழங்கி வருவதாகவும், அதேபோல தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் வாய்ப்புள்ளவர்கள், எங்களுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவினால், இன்னும் நிறைய பேருக்கு பலன்கள் போய்ச்சேரும் என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!