குமாரபாளையம் கோவிலில் சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்து வழிபாடு

குமாரபாளையம் கோவிலில் சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம்   செய்து வழிபாடு
X

குமாரபாளையத்தில் சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் பாரதி நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்யப்பட்டு, பாதபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் பக்தி பாடல்கள் பாடியவாறும், கும்மியடித்து ஆடியவாறும் கன்னிமார் சுவாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!