குமாரபாளையம் : கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

குமாரபாளையம் : கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி.

குமாரபாளையத்தில் கஞ்சா வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

குமாரபாளையம் பழைய காவேரி பாலம் பகுதியில் கஞ்சா விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டிச. 25ல் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, நந்தகுமார், எஸ்.ஐ. சேகரன், எஸ்.ஐ. மோகனசுந்தரம் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.,

ஒருவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. இவரை கைது செய்து, இவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் 500 ரூபாய் கைப்பற்றபட்டன.

விசாரணையில் பரமத்தி வேலூர் அருகே உள்ள மணியனூரை சேர்ந்த பெரியசாமி, 40, என்பது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் நீதி மன்ற காவலில் சிறையில் அடைந்தனர். இந்த நிலையில் இவரை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்திரவிட்டதின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
ai in future agriculture