குமாரபாளையத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். காமராஜ் திருவுருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிர்வாகிகள் பொருளர் சிவராஜ், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், நகர பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, நகர விவசாய அணி தலைவர் முருகேசன், துணை தலைவர் சிவகுமார், முன்னாள் தலைவர் மனோகரன், முன்னாள் நகர துணை தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலர் கோகுல்ராஜ், நகர பொது செயலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அருகே வீ. மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியை கோமதி, விடியல் ஆரம்பம் பிரகாஷ் தலைமையில், காமராஜ் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற 50 மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், தி.மு.க. நகர செயலர் செல்வம் மற்றும் பி.டி.ஏ. நிர்வாகிகள் பங்கேற்று காமராஜ் பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாக காமராஜர் பிறந்த நாள் தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடிவினா போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture