காளியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்

காளியம்மன் கோவில்  தீர்த்த குட ஊர்வலம்
X

படவிளக்கம் :

குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

காளியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை கணபதி பூஜை, பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மஞ்சள் ஆடை அணிந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். இன்று நவகிரக ஹோமம், பூமி பூஜை செய்து மண் எடுத்தல், ஜன. 19 அஷ்ட லட்சுமி ஹோமம், முதற்கால யாக சாலை பூஜைகள் துவக்கப்படவுள்ளன. ஜன. 20ல் காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. ஜன. 21 காலை 06:30 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோபுர கலசங்களுக்கு புனித நீர் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்படவுள்ளன. அதே நாள் இரவு உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படவுள்ளன. இந்த கும்பாபிஷேக விழாவை பவானி காளிங்கராயன்பாளையம் மணிகண்டன் சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் சதாசிவம் மற்றும் குழுவினர் நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture